அஜ்மீரில் 60 வயதான நபர் 26 வயது மனைவிக்கு கொடுத்த முத்தலாக்

2017 ஆம் திருமண நடந்துள்ளது. திருமணம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு தனது கணவர் தன்னை கொடுமைபடுத்த தொடங்கியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அஜ்மீரில் 60 வயதான நபர் 26 வயது மனைவிக்கு கொடுத்த முத்தலாக்

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498-ஏ கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ajmer:

அஜ்மீர் தர்காவின் 60 வயது பராமரிப்பாளர் தன்னுடைய 26 வயது மனைவியை மிரட்டி  முத்தலாக் கொடுத்தாகவும் அதனால் வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது. 

அஜ்மீரில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சலிமுதீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498-ஏ (திருமணமான பெண்ணை கொடுமைபடுத்துதல்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் முத்தலாக் மசோதாவின் கீழும் வழக்கு பதிய ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். 

2017 ஆம் திருமண நடந்துள்ளது. திருமணம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு தனது கணவர் தன்னை கொடுமைபடுத்த தொடங்கியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

More News