This Article is From Sep 19, 2019

போலிச் சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 60 பேர் சஸ்பெண்ட்!!

B.Ed., பட்டப்படிப்பு முடித்து அதன் மூலம் பணிக்கு சேர்ந்த 4,500 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலி சான்றிதழ் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

போலிச் சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 60 பேர் சஸ்பெண்ட்!!

சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mathura:

உத்தரப்பிரதேசத்தில் போலிச் சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 60 பேரை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. 

இந்த தகவலை உத்தரப் பிரதேசத்தின் கல்வி வாரியம் வெளியிட்டிருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் போலியான B.Ed சான்றிதழை அளித்து பணியை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

போலிச் சான்றிதழை பயன்படுத்தி ஆசிரியர் பணியை சிலர் பெற்றிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர். சுமார் 4,500 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

இதன் முடிவில் 60 பேர் போலிச் சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.