கௌட்டமாலாவில் கொப்பளிக்கும் எரிமலை… பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்பு!

மத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌட்டமாலா நாட்டில், ஃப்யூகோ என்ற எரிமலை கரும்புகையைக் கக்கி வருகிறது. இதனால், அங்கு இருக்கும் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது

கௌட்டமாலாவில் கொப்பளிக்கும் எரிமலை… பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்பு!

தொடர்ந்து கரும்புகையைக் கக்கி வருகிறது ஃப்யூகோ எரிமலை

ஹைலைட்ஸ்

  • கௌட்டமாலாவில் இந்த ஆண்டு வெடிக்கும் இரண்டாவது எரிமலை இது
  • 7 பேர் இதவரை இந்த பேரிடரால் இறந்துள்ளனர்
  • வீடுகள், மரங்கள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன
Guatemala City:

மத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌட்டமாலா நாட்டில், ஃப்யூகோ என்ற எரிமலை கரும்புகையைக் கக்கி வருகிறது. இதனால், அங்கு இருக்கும் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. 

பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் அவர்கள் வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருமளவு கரும்புகை எரிமலையிலிருந்து வெளியேறி வருவதால், அருகாமையில் இருக்கும் சாலைகள், விவசாய நிலங்கள், வீடுகள் என அனைத்தும் கருப்பு நிறமாக மாறியுள்ளது. 

இந்த பேரிடர் குறித்து கௌட்டமாலா அரசு, `இந்த பேரிடரால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

guatemala volcano ash afp

நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `இந்த பேரிடரால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 லட்சம் மக்கள் இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த் விஷயம் குறித்து அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறது. எனவே, மக்கள் வதந்திகளை பரப்பாமல் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ரெட் க்ராஸ், போலீஸார் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணயில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்' என்றார். மேலும் அவர், அவசர நிலையை பிரகடனப்படுத்தலாமா என்ற ஆலோசனையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

கௌட்டமாலாவில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிகழும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு இது. ஃப்யூகோ எரிமலை இல்லாமல் இன்னும் இரண்டு எரிமலைகள் கௌட்டமாலாவில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருக்கிறது.