கொரோனா பாதிப்பால் கேம்பஸ் இன்டர்வியூ வேலையை இழந்த 6 ஐஐடி மாணவர்கள்!!

ஐஐடி கவுகாத்தியில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளதா என ஐஐடி நிர்வாகம் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பால் கேம்பஸ் இன்டர்வியூ வேலையை இழந்த 6 ஐஐடி மாணவர்கள்!!

252 நிறுவனங்கள் 924 மெட்ராஸ் ஐஐடி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்
  • ஐஐடி மெட்ராஸில் 6 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது
  • கொரோனா பாதிப்பால், மாணவர்களை பணிக்கு எடுக்க முடியாதென அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை வாய்ப்பை பெற்ற 6 மெட்ராஸ் ஐஐடி மாணவர்களை, நிறுவனங்கள் பணிக்கு அமர்த்த மறுத்துள்ளன. நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்தும், கொரோனாவால் பணியை இழக்கும் துரதிருஷ்டவாளிகளாக மாணவர்கள் மாறியுள்ளனர்.

இருப்பினும், பொறியியல் பிரிவில் நாட்டிலேயே முதன்மை கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐ.ஐ.டி. இருப்பதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தள்ளது. 

வளர்ந்த, வளரும் நாடுகள் என பாரபட்சம் பார்க்காமல் ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த வைரஸ் ஏற்படுத்திய கொடூர தாக்குதலால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 லட்சம்பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

உயிரிழப்பு ஒருபக்கம் ஏற்பட்டாலும், பொருளாதார பாதிப்புகள் கோடிக்கணக்கான மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தாக்கத்தால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உண்டாகியுள்ளது. 

நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் நம்பிக்கை மிக்க கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகிறது. இங்கு படிப்பவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக கூறலாம். ஆனால் அங்குகூட கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsbeep

சென்னை ஐஐடியில் படித்த 6 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர்களை பணிக்கு எடுத்த நிறுவனங்கள், வேலையில் சேர்க்க மறுத்து விட்டன. கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பே இதற்கு காரணம் என்று நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

ஐஐடி மும்பையில் இதுபோன்ற நிலைமை ஏற்படவில்லை. ஆனால் பணிக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கவுகாத்தியிலும் இதே நிலைமைதான் உள்ளது. 

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐஐடி கவுகாத்தியில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளதா என ஐஐடி நிர்வாகம் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.