ஐஎஸ்ஐஎஸ் பதுங்கியிருந்த இடத்தில் நடந்த ரெய்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்: இலங்கை போலீஸ்!

கால்முனை என்ற டவுனில் சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை மீது, மர்ம கும்பல் ஒன்று திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஐஎஸ்ஐஎஸ் பதுங்கியிருந்த இடத்தில் நடந்த ரெய்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்: இலங்கை போலீஸ்!

"பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில்தான் 15 கொல்லப்பட்டுள்ளனர்"


Colombo, Sri Lanka: 

இலங்கையில்(Srilanka) பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி ரெய்டில், 6 குழந்தைகள் உட்பட 15  கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

‘3 தற்கொலைப் படை தீவிரவாதிகளை சுற்றிவளைத்தபோது அவர்கள் வெடிகுண்டை இயக்கி தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலில் 6 குழந்தைகளும் கொல்லப்பட்டனர்' என்று கூறியுள்ளது போலீஸ்.

கால்முனை என்ற டவுனில் சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை மீது, மர்ம கும்பல் ஒன்று திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில்தான் 15 கொல்லப்பட்டுள்ளனர். 

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குத் தொடர்புடையவர்கள் கால்முனாய் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று துப்பு கிடைத்தது அடுத்து, அந்நாட்டு ராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. அந்தச் சோதனையின் போதுதான் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த யாருக்கும் இந்த சம்பவத்தின் போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ்(ISIS) தீவிரவாத அமைப்பு, அதற்கு பொறுப்பேற்று வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ நேற்று சோதனை செய்த இடத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது. ‘வீடியோ எடுத்த இடத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்' என்று போலீஸ் தரப்பு நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, இலங்கையின் ராணுவம் மற்றும் போலீஸ், தீவிரவாதிகளை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................