நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,85,493 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,20,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,47,979 பேர் குணமடைந்துள்ளனர். 17,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18,653 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 507 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 88,26,585 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 2,17,931 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.