பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியை போதையில் கொன்ற தஞ்சை இளைஞர்..!

பாதி எரிந்த நிலையில் மூட்டை கட்டி கால்வாயில் வீசப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இக்கொலை வெளிச்சத்துக்கு வந்தது

பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியை போதையில் கொன்ற தஞ்சை இளைஞர்..!

கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலிசார் தரப்பில் கூறப்படுகிறது

Thanjavur:

தஞ்சை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் உடல் மூட்டை கட்டி கால்வாயில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அவரது நண்பரை போலிசார் கைது செய்துள்ளனர்.

ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பியர். இவர் ஐம்பது வயதைத் தாண்டியவர். தமிழகத்தைச் சுற்றிப் பார்க்க அண்மையில் இந்தியா வந்த இவர், தனது நண்பர் திருமுருகன் அழைத்ததன் பேரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் ஆவிக்கோட்டைக்கு வந்துள்ளார். இருவரும் அருகில் உள்ள ஊர்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமுருகன் தாக்கியதில் பியர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், கொலையை மறைக்க உடலை பெட்ரோல் ஊற்றி திருமுருகன் எரித்துள்ளார். பாதி எரிந்த நிலையில், சடலத்தை வெட்டி மூட்டை கட்டி உள்ளிக்கோட்டை கால்வாயில் வீசியுள்ளார். உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சடலத்தைக் கண்டெடுத்த போலிசார் திருமுருகனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருமுருகன் தாமாக முன்வந்து சரணடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இருவருக்கும் ஓரினச்சேர்க்கைப் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.