கோடைக்காலத்தில் உடல் எடை குறைக்க 5 டிப்ஸ்

கோடைக்காலம் என்பது உடலில் நச்சுகளை அகற்றும் காலம். அதிகளவில் தேங்காய் தண்ணீர், கரும்பு ஜூஸ், மோர், ஆகியவற்றைக் குடித்து உடலில் உள்ள கசுடுகளை எளிதாக வெளியேற்றி விடலாம்.

கோடைக்காலத்தில் உடல் எடை குறைக்க 5 டிப்ஸ்

ஹைலைட்ஸ்

  • கோடைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்
  • காய்கறி சாலட்களை அதிக சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்தை அதிகரிக்கிறது

ஒவ்வொரு காலமும் மாறும் போதும் அதற்கேற்ற வகையில்தான் உணவையும் பழக்க வழக்கத்தையும் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.  கோடைக்காலத்தில் வெயில் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. சூழலுக்கு ஏற்ற வகையில் சில வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால் மாறும் பருவ நிலைக்கு ஏற்றவகையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆரோக்கியமான டயட்டிற்கு எதை சேர்க்கலாம் என்பது குறித்து  சில டிப்ஸ்களை தருகிறார். 

கோடைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய 5 டிப்ஸ்கள்

1.கோடைக்காலம் முழுவதும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்றால், தினமும் 8-10 கிளாஸ் தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவதை தவிர்க்கிறது.  

2. அன்றாடம் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளத் தொடங்குங்கள். பழத்தில் ஆண்டியாக்ஸிடன்ஸ் உடலுக்கு அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்கிறது. உடல் எடை குறைக்கவும் மலச்சிக்கலையும் தீர்க்கிறது. 

3. வெயில் காலத்தில்  நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். பீட்ரூட், அவகோடோ, பிரக்கோலி, ஆர்ட்டிசோக், ப்ருசல் ஸ்ப்ரவுட், பருப்பு வகைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை,ஓட்ஸ், திணை ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகமுள்ளது. 

lb0nrd3

4. செரிமானத்திற்கு நார்ச்சத்து உள்ள உணவுகள் பெரிதும் உதவுகின்றன. காலநிலை மாறும்போது செரிமானப் பிரச்னைகளை உருவாக்குகிறது. நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளைஅகற்ற பெரிது உதவுகிறது. 

5. கோடைக்காலம் என்பது உடலில் நச்சுகளை அகற்றும் காலம். அதிகளவில் தேங்காய் தண்ணீர், கரும்பு ஜூஸ், மோர், ஆகியவற்றைக் குடித்து உடலில் உள்ள கசுடுகளை எளிதாக வெளியேற்றி விடலாம்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

More News