ஹரியானாவில் வீட்டிற்கே வந்து சிறுமியை கடத்த முயன்ற துணிகர சம்பவம்: பாதிக்கப்பட்ட சிறுமி

ஆண்கள் குழுவாக வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது சுமார் 20 பேர் வீட்டிற்கு வெளியே நின்று உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தினரை தடுத்து நின்றனர். சண்டை 10 நிமிடம் நீடித்தது.

ஹரியானாவில் வீட்டிற்கே வந்து சிறுமியை கடத்த முயன்ற துணிகர சம்பவம்: பாதிக்கப்பட்ட சிறுமி

காவல்துறை பிரிவு 29கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. (Representational)

Gurugram:

ஹரியானா மாநிலம் குர்கானில் சிறுமியைக் கடத்தும் முயற்சியில் தோல்வியுற்றதால் அப்பெண்ணின் மூக்கை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

சக்ராபூர் கிராமத்தில் கவுரவ் யாதவ், ஆகாஷ் யாதவ், சதீஷ் யாதவ், மோனு யாதவ் மற்றும் லீலு யாதவ் என அடையாளம் காணப்பட்டவர்கள் சிறுமியை வீட்டிலிருந்து கடத்த முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தன்னை கடத்தி சென்ற முயன்றவர்களை எதிர்த்து அப்பெண் போராடியதாக பெண்ணின் சகோதரர் கூறுகிறார். பெண்ணை கடத்த முடியாததால் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களை தாக்கியதோடு பெண்ணின் மூக்கை வெட்டியுள்ளனர்.

காவல்துறை பிரிவு 29கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 

ஆண்கள் குழுவாக வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது சுமார் 20 பேர்  வீட்டிற்கு வெளியே நின்று உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தினரை தடுத்து நின்றனர். சண்டை 10 நிமிடம் நீடித்தது. 

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்களை கைது செய்ய பார்க்கிறோம்” என்று காவல்துறை அதிகாரி அரவிந்த்குமார் தெரிவித்தார்.

Listen to the latest songs, only on JioSaavn.com