அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொலை!

வியாழனன்று மாலையில் அஸ்ஸாமின் தின்சுக்கியா பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுகிறார்கள்

Guwahati:

வியாழனன்று மாலையில் அஸ்ஸாமின் தின்சுக்கியா பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் கீர்பரி பிசோன்பரி பகுதியிலுள்ள் பொது மக்களில் ஐந்து பேரை துப்பாக்கி முனையில் கொண்டுவந்து லோகித் ஆற்றின் அருகே கொலை செய்துள்ளனர்.

அஸ்ஸாம் தலைமை காவல் அதிகாரி குலதார் சாய்கியா மற்றும் முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குவாஹாத்தியிலிருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி 500கிமீ-ல் உள்ளது.

ராணுவத்தினர் அஸ்ஸாம் - அருணாச்சல பிரதேச எல்லையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து தின்சுக்கியா மாவட்டத்தில் 12 மணிநேர பந்த் அறிவித்துள்ளனர். மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

Newsbeep

உல்ஃபா தீவிரவாதிகள் அஸ்ஸாமில் குடியேறும் வேறு மாநிலத்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அக்.13ம் தேதி உல்ஃபா குவாஹாத்தியில் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர்.