This Article is From Sep 03, 2019

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

"சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே லேசான மழை பொழிவு இருக்கலாம்."

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

"அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்."

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை மையம், “தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு, ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

குறிப்பாக அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே லேசான மழை பொழிவு இருக்கலாம். 

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோவையின் சின்னக்கள்ளர் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து நீலகிரியின் ஜி.பஜார் பகுதியில் 5 சென்டீ மீட்டர் மழை பொழிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. 


 

.