This Article is From Sep 01, 2019

ஒருவர் மீது ஒருவர் கல்லெறியும் வினோத திருவிழா!! 400 பேர் காயம் - 12 பேர் சீரியஸ்!

400 ஆண்டுகாலமாக கல்லெறியும் பாரம்பரிய திருவிழா நடைபெற்று வருகிறது. ஆற்றின் கரையோரம் கூடும் 2 கிராம மக்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை எறிகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் கல்லெறியும் வினோத திருவிழா!! 400 பேர் காயம் - 12 பேர் சீரியஸ்!

சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்த திருவிழா கண்காணிக்கப்படுகிறது.

Bhopal:

ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்திக் கொள்ளும் வினோத திருவிழா மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இதன் முடிவில் 400 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 12 பேருக்கு நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் சிலர் கண்களை கல்வீச்சுக்கு பறி கொடுத்துள்ளனர். 

போபால் மாவட்டம் ஜாம் ஆற்றின் அருகே இந்த திருவிழா சுமார் 400 ஆண்டுகளாக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில் பந்துர்ணா மற்றும் சவர்கான் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆற்றின் இருபுறமும் நின்றுகொண்டு கற்களை வீசுகின்றனர். 

திருவிழா தொடங்கியதும், கொடி ஒன்றை ஆற்றின் நடுவே நட்டு வைத்து விடுவார்கள். பின்னர், இரு கிராம மக்கள் கரையில் இருந்து அந்த கொடியை எடுக்க வரவேண்டும். அப்போது எதிர்த் தரப்பினர் கற்களை வீசி கொடி எடுப்பதை தடுப்பார்கள். 

கல்வீச்சுக்களை எதிர்கொண்டு எந்த கிராம மக்கள் கொடியை எடுக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இந்தமுறை நடந்த திருவிழாவில் பந்துர்ணா கிராம மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பந்துர்ணா கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் சவர்கான் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். அவரை கரம் பிடிப்பதற்காக சவர்கானில் இருந்து காதலியை அழைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்க முற்பட்டுள்ளார். ஜோடிகள் ஆற்றில் சென்றபோது, அவர்கள் மீது சவர்கான் கிராமத்தினர் கல்வீச்சு நடத்தினர். அவர்களை பந்துர்ணா கிராம மக்கள் பத்திரமாக காப்பாற்றி கரை சேர்த்தனர்.  இதன் பின்னர் நல்ல பல காரியங்கள் நடந்ததால், அதன் நினைவாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

டெக்னாலஜி அப்டேட் ஆகிவிட்ட நிலையில் ஒட்டுமொத்த திருவிழாவும் சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 
 

.