ஒடிசாவில் அரசுக்கு சொந்தமான சுரங்கத்தில் நிலச்சரிவினால் தொழிலாளர்கள் 4 பேர் பலி

கடந்த ஆண்டு டிசம்பரில் மேகலயாவில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கத்தில் இறங்கி 15 தொழிலாளர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது. ஆற்று நீர் சுரங்கத்திற்குள் பாய்ந்ததால் மீட்பு பணிகளும் தடைபட்டன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஒடிசாவில் அரசுக்கு சொந்தமான சுரங்கத்தில் நிலச்சரிவினால் தொழிலாளர்கள் 4 பேர் பலி

Mahanadi Coalfields landslide:மீண்டும் உற்பத்தியை தொடங்க ஒரு வாரம் ஆகும் என்று மெஹ்ரா தெரிவித்துள்ளார். (Representational)


New Delhi: 

ஒடிசாவில் உள்ள கோல் இந்தியா லிமிடெட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்று  அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஒடிசாவில் திறந்த சுரங்கள் ஒரு நாளைக்கு 20,000 டன் உற்பத்தி திறன் கொண்டது. செவ்வாய்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கு பிறகு மூடப்பட்டுள்ளது என்று  கோல் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் திக்கன் மெஹ்ரா தெரிவித்தார்.

”மீண்டும் உற்பத்தியை தொடங்க ஒரு வாரம் ஆகும்” என்று மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் சில சட்டவிரோதமானவை மற்றும் பெரும்பாலும் தொலைதூர மலைப்பாங்கான நிலப்பரப்புகளிலும் மோசமான பாதுகாப்பு நிலையையும் கொண்டுள்ளன. இருப்பினும் பல விபத்துகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதால் அது குறித்த தகவல்கள் ஏதுமில்லை.

 கடந்த ஆண்டு டிசம்பரில் மேகலயாவில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கத்தில் இறங்கி  15 தொழிலாளர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது. ஆற்று நீர் சுரங்கத்திற்குள் பாய்ந்ததால் மீட்பு பணிகளும் தடைபட்டன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................