This Article is From Jul 20, 2019

24 மணி நேரத்தில் 4 நிலநடுக்கம்… பரபரப்பில் அருணாச்சல பிரதேசம்!

ஒவ்வொரு முறை நிலநடுக்கம் வந்தபோதும், சில நொடிகளே அவை நீடித்தது.

24 மணி நேரத்தில் 4 நிலநடுக்கம்… பரபரப்பில் அருணாச்சல பிரதேசம்!

இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்போ அல்லது கட்டடச் சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • 4 நிலநடுக்கங்களில் 5.6 ரிக்டர் என்பதை அதிகபட்சமாகும்
  • இந்நிலநடுக்கங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை
  • குவாத்தி, திமாபூரிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது
Guwahati:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் 5.5, 5.6, 3.8 மற்றும் 4.9 என்று பதிவாகியுள்ளன. வெள்ளிக் கிழமை மதியம் மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் இந்த நிலநடுக்கங்கள் எற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு முறை நிலநடுக்கம் வந்தபோதும், சில நொடிகளே அவை நீடித்தனவாம். இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்போ அல்லது கட்டடச் சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் நிலநடுக்கமானது, வெள்ளிக் கிழமை மதியம் 2:52 மணிக்கு, அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு காமெங் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. 

அதையடுத்து 3:04 மணிக்கு, மீண்டும் 3.8 ரிக்டர் அளவில், கிழக்கு காமெங் மாவடத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தொடர்ந்து மதியம் 3:21 மணிக்கு, குருங் குமே மாவடத்தில் 95 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் இன்று அதிகாலை 4:24 மணிக்கு, 5.5 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் கிழக்கு காமெங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. 

.