தமிழகத்தில் புதியதாக 4,244 பேருக்கு கொரோனா! மொத்த உயிரிழப்பு 2,000ஐ நெருங்குகின்றது!!

மாநிலம் முழுவதும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையானது 105 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதியதாக 4,244 பேருக்கு கொரோனா! மொத்த உயிரிழப்பு 2,000ஐ நெருங்குகின்றது!!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 4,244 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
  • தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 1,38,470 ஆக அதிகரித்துள்ளது
  • மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் இன்று 4,244 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பானது 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று சென்னையில் 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் இதுவரை 77,338 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒன்பதாவது நாளாக சென்னையில் 2,000க்கும் குறைவாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இன்று 68 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையின் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 89,532 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 46,969 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையானது 105 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.