This Article is From Oct 23, 2019

லண்டனில் பயங்கரம் : ட்ரக்கில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓட்டுநரை விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

லண்டனில் பயங்கரம் : ட்ரக்கில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

அதிகாலை 1.40 மணியளவில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக காவல்துறை தெரிவித்தனர். (Representational)

London:

லண்டனில் ட்ரக் ஒன்றில்  39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரக் அயர்லாந்தில் இருந்து வந்துள்ளது. 25 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் உள்ள தொழிற்துறை பூங்காவில் ட்ரக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாலை 1.40 மணியளவில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக காவல்துறை தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓட்டுநரை விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக எசெக்ஸ் மாகாண காவல்துறை உயர் அதிகாரி “ இது ஒரு சோகமான சம்பவம். மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். இருப்பினும் இது ஒரு நீண்ட நாள் பணியாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்

இந்த ட்ரக் அக்டோபர் 19 சனிக்கிழமையன்று ஹோலிஹெட் வழியாக நாட்டிற்குள் நுழைந்திருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. 

விசாரணைக்கு பின்பு முழு உண்மையும் வெளியில் வரும். 

.