இந்தியாவில் ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு!! 32 பேர் மரணம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 452 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு!! 32 பேர் மரணம்

1,700-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 32 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 452 ஆக உள்ளது. சிகிச்சையால் குணம் அடைந்து 1,700-க்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியாவை பொறுத்தளவில் கொரோனாவில் இருந்து மீளுவோரின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த செவ்வாயன்று குணம் அடைந்தவர்களின் சதவீதம் 9.99 ஆகவும், புதன் அன்று 11.41 ஆகவும், வியாழனான நேற்று 12.02 ஆகவும், இன்று 13.06 ஆகவும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது 100-யை எட்டி விட்டால் அனைவரும் பூரண குணம் அடைந்து விட்டனர் அல்லது யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.