கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி!

ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் சமையல் நடந்தபோது, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி!

இந்த சம்பவம் தொடர்பாக ஷாபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (Representational image)

Ranga Reddy:

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக சைபராபாத் போலீசார் கூறும்போது, சுரேஷ் என்பவரிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது. அதில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரெங்கா ரெட்டி சென்றபோது, அங்கு சமைத்து கொண்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் அவரது மகன் தவறி விழுந்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக ஷாபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளான். எனினும், அங்கிருந்து ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, அங்கு சிகிச்சை நடந்து வரும்போதே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக ஷாபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

More News