This Article is From Jul 20, 2019

செயற்கை பால் தயாரித்த 3 தொழிற்சாலை அமைப்பில் சோதனை 57 பேர் கைது :பல திடுக்கிடும் தகவல்கள்

3 யூனிட் செயற்கை பால் தயாரிப்பு நிறுவனம் 24மணிநேரமும் 7 நாளும் செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அதிகாரி கூறினார்.

செயற்கை பால் தயாரித்த 3 தொழிற்சாலை அமைப்பில் சோதனை 57 பேர் கைது :பல திடுக்கிடும் தகவல்கள்

செயற்கை பால் லிட்டருக்கு ரூ. 5 ஆனால் இது முக்கிய சந்தைகளுக்கு 45 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

Bhopal:

மத்திய பிரதேசத்தில் குவாலியர் சம்பல் பகுதியில் “அதிக நச்சுத்தன்மை வாய்ந்த செயற்கை பால்” தயாரிக்கும் மூன்று தொழிற்சாலைகள் சோதனை செய்யப்பட்டு  57பேர் கைது செய்யப்பட்டனர் என்று மாநில காவல்துறையின் சிறப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.

பிரபலமான நிறுவனங்களின் போலி முத்திரைகள் குத்தப்பட்டு பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. 

சுமார் 10,000 லிட்டர் போலி பால், 500 கிலோவுக்கு மேற்பட்ட கோவா, 200 கிலோவுக்கு போலியான பன்னீர் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மொத்தம் 20 டேங்கர்கள் 11 பிக் -அப் வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன். மேலும் துணி சலவை செய்யும் திரவ சோப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் குளுக்கோஸ் தூள் ஆகியவை இந்த பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

0rahifj

ஒரு லிட்டர் பாலில் 30 சதவீதம் மட்டும் பால் சேர்த்து பின் அதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், திரவ சோப்பு , வெள்ளை நிற பெயிண்ட், மற்றும் குளுக்கோஸ் தூள் ஆகியவற்றைக் கலந்து பால் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

செயற்கை பனீரை தயாரிக்க இந்த போன்று செய்முறையை பயன்படுத்தியுள்ளனர். இந்த கலப்படப் பால் இந்தியாவின் அனைத்து முக்கிய சந்தைகளுக்கும் வழங்கப்பட்டது.

செயற்கை பால் லிட்டருக்கு ரூ. 5 ஆனால் இது முக்கிய சந்தைகளுக்கு 45 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பனீர் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலால விலையில் விற்கப்பட்டுகிறது. 

3 யூனிட் செயற்கை பால் தயாரிப்பு நிறுவனம் 24மணிநேரமும் 7 நாளும் செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அதிகாரி கூறினார்.

இந்த பிரிவுகளை இயக்கும் கும்பலுடன் சிலர் உணவு ஆய்வாளர்களும் ஈடுபட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

.