அடுத்தடுத்து தொடரும் நீட் தற்கொலைகள்: சமீபத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை!!

நீட் தேர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்தடுத்து தொடரும் நீட் தற்கொலைகள்: சமீபத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை!!

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் ஒருவர் தற்போது தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று 50 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரின் மகள் நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பரபரப்பு முடிவதற்குள் தற்போது தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஒருவர் நாளை நீட் தேர்வினை எழுத இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவனின் உறவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Newsbeep

தொடர்ச்சியான நீட் தற்கொலைகள் நடைபெற்று வருகின்ற சூழலில் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.