அந்தமானில் மூன்று தீவுகளின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது

அந்தமானில் உள்ள மூன்று தீவுகளின் பெயரை வரும் ஞாயிறு அன்று மாற்றி புது பெயரை இந்தியா அரசு சூட்ட இருக்கிறார்கள்

அந்தமானில் மூன்று தீவுகளின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது

அந்தமான் மற்றும் நிக்கோபாரில் பெரிய தீவு ஹாவ்லாக் தீவாகும்

ஹைலைட்ஸ்

  • டிசம்பர் 30 இல் மூன்று தீவுளின் பெயர் மாற்ற படுகிறது
  • பிரதமர் ஞாயிறு அன்று 150 மீட்டர் உயர தேசிய கொடியை ஏற்றுகிறார்
  • பிரபல சுற்றுலா தளமான ஹாவ்லாக் தீவின் பெயரும் மாற்ற படுகிறது
New Delhi:

அந்தமானில் உள்ள மூன்று தீவுகளின் பெயரை வரும் ஞாயிறு அன்று மாற்றி புது பெயரை இந்தியா அரசு சூட்ட இருக்கிறது. ராஸ் தீவு, நீல் தீவு, ஹாவ்லாக் தீவு ஆகிய மூன்று தீவுகளின் பெயர் தான் மாற்ற இருக்கிறார்கள். டிசம்பர் 30 போர்ட் பிளார் செல்லும் பிரதமர் மோடி, அந்த மூன்று தீவுகளின் பெயரை மாற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

ராஸ் தீவை நேதாஜி சுமாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்ற இருக்கிறார்கள். ஞாயிறு முதல் நீல் தீவானது சாகித் டிவீப் என அழைக்கபட இருக்கிறது. பிரபல சுற்றுலா தளமான ஹாவ்லாக் தீவு, சுவராஜ் டிவீப் என பெயர் மாற்றம் செய்யபடுகிறது.

இதனை அதிகாரபூர்வமாக பிரதமர் வரும் ஞாயிறான டிசம்பர் 30 அன்று அறிவிக்க இருக்கிறார். இதற்கான வழிமுறைகளை உள்துறை அமைச்சகம் ஏற்கனவே முடித்து விட்டது.

அசாத் ஹிண்ட் அரசை 1943 இல் நேதாஜி சுமாஷ் சந்திர போஸ் துவங்கினார். இதன் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக போர்ட் பிளாரில் பிரதமர் மோடி அவர்கள் 150 மீட்டர் உயர தேசிய கொடியை ஏற்றுகிறார். பிரதமர் உடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அந்தமான் செல்கிறார்.

இரண்டாம் உலக போர் நடந்த போது, அந்தமானை ஜப்பான் கைப்பற்றியது. அப்பொழுது ஜப்பானுக்கு எதிராக அங்கு நேதாஜி அவர்கள் இந்தியா தேசிய கொடியை ஏற்றினார். அந்தமான் நிக்கோபார் தீவின் பெயரையும் சாகித் மற்றும் சுவராஜ் டிவீப் ஆக பெயர் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கடந்த மார்ச் 2017 இல் ராஜ்யா சபாவில் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர் சுற்றுலா தளமான ஹாவ்லாக் தீவின் பெயரை மாற்ற கூறினார். இல.கணேசன் அவர்கள் இந்திய மக்களை எதிர்த்து 1857 இல் போராடிய ஒருவரின் பெயரை பிரபல சுற்றுலா தளத்திற்கு வைத்திருப்பது அவமானத்திற்குரியது என தெரிவித்திருந்தார்.

 ஹாவ்லாக் தீவானது பிரிட்டிஸ் ஜெனரல் சர் ஹென்றி ஹாவ்லாக் பெயரில் பெயரிடபட்டுள்ளது.

இந்த வருடம் உத்திர பிரதேசத்தில் பல இடங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அலகாபாத் பிரகயாராஜ் என பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது.ஃபைசாபாத் என்பது அயோத்தியா என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தது.

பா.ஜ.க வை சேர்ந்த ஒருவர் அக்ராவின் பெயரை அக்ராவான் இல்லை அகர்வால் என்ன மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.சர்தானாவை சேர்ந்த சங்கீத் சோம் என்பவர் முசாப்பாநகரின் பெயரை லட்சுமி நகர் என மாற்ற வேண்டும் என சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

தெலங்கானாவில் பிரசாரம் செய்யும் போது யோகி அதியாநாத், பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற்றால் கரிம்நகர் என்பதை கரிம்புரம் என மாற்றபடும் என கூறி இருந்தார். மற்றோரு பா.ஜ.க கட்சிகாரர், ஹைதராபாத்தின் பெயரை பாக்கியாநகர் என மாற்றபடும் என கூறியிருந்தார். 

(With inputs from ANI)

More News