This Article is From Oct 06, 2018

40அடி விளம்பர பலகை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

புனே ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் டிராபிக் சிக்னலில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை கீழே விழுந்தது

40அடி விளம்பர பலகை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

விளம்பர பலகையை அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Pune:

புனே ரயில் நிலையத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 40 அடி விளம்பர பலகை கீழே விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் 40 வயது நிரம்பிய ஒருவர் தன்னுடைய மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி வந்தபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துணை ஆணையாளர் பி.சிங் கூறும் போது, விளம்பர பலகையை அகற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினார். உயிரிழந்தவர்கள் ஷாம்ராவ் காசர் (70), ஷாம்ராவ் தோட்ரே (48) மற்றும் சிவாஜி பர்தேஷி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அந்த விளம்பர பலகையின் காண்ட்ராக்டர் மற்றும் அவரது உதவியாளர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து புனே ரயில்வே துறை மேலாளர் கூறுகையில், ரயில்வே துறை, விளம்பர பலகை வைத்துக் கொள்ள 2 வருடங்களுக்கு முன் விளம்பர நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. அந்நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால், விளம்பர பலைகையை அகற்ற கூறியது.

அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் தான் காண்ட்ராக்டரை அழைத்து வந்து விளம்பர பலைகையை பரித்தோம். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் மருத்துவ சிகிச்சை ரயில்வே துறை சார்பில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

.