This Article is From Jan 01, 2019

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் :3 பேர் காயம்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிபிசி ரேடியோ புரொடியூசர் ‘தாக்குதல் சம்பவ நடந்த பொழுது அல்லாஹ் என்று கத்திய சப்தம் கேட்டதாக கூறியுள்ளார்’

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் :3 பேர் காயம்

லண்டன் நகரில் உள்ள மான்செஸ்டர் விக்டோரியா ரயில் நிலையத்தில் காலை 8.50 மணியளவில் சம்பவம் நடந்தது.

London, United Kingdom:

லண்டன் நகரில் உள்ள மான்செஸ்டர் விக்டோரியா ரயில் நிலையத்தில் காலை 8.50 மணியளவில் வழிப்போக்கன் ஒருவர் ‘அல்லாஹ்' என்று கத்தியபடி  50 வயது மதிக்கத்தக்க  பயணிகள் இருவர் மற்றும் போஸிசார் ஒருவரையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தை அறிந்த பிரிட்டிஷ் தீவிரவாத எதிர்ப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிபிசி ரேடியோ புரொடியூசர் ‘தாக்குதல் சம்பவ நடந்த பொழுது அல்லாஹ் என்று கத்திய சப்தம் கேட்டதாக கூறியுள்ளார்' 12 இன்ஞ் நீளமுள்ள (30 செண்டிமீட்டர்) கத்தியால் தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு முகத்திலும் அடிவயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்கள் கடுமையாக ஏற்பட்ட பொழுதிலும் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனத் தெரிகிறது. 

தாக்குதலை நடந்திய அடையாளந் தெரியாத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கடந்த 2017 ஆம் ஆண்டு புத்தாண்டு நிகழ்வில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் இறந்தனர். 139 பேர் காயமடைந்தனர். அதனால் புத்தாண்டு நிகழ்வு நடக்கும் இடமான ஆல்பர்ட் சதுக்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

.