சண்டையில் முடிந்த திருமணம் : 3 பேருக்கு காயம்

நவம்பர் 1-ம் தேதி காவல்நிலையத்துக்கு வந்த இருவீட்டாரும் மணமக்கள் இருவருக்குமிடையே எந்த பிரச்னையும் இல்லையென்று கூறி புகார் அளிக்க முன்வரவில்லை என்று தெரிவித்தார்.

சண்டையில் முடிந்த திருமணம் : 3 பேருக்கு காயம்

அங்கிருந்த நாற்காலிகளைப் பயன்படுத்தி தாக்கிக் கொண்டனர்.

Suryapet, Telangana:

தெலங்கானாவில் அக்.29ம் தேதி நடைபெற்ற திருமணம் ஒன்றில் நடந்த சடங்கில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. 

இதில் ஒருவரையொருவர் அங்கிருந்த நாற்காலிகளைப் பயன்படுத்தி தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், “தெலுங்கானா சூர்யபேட் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த இந்திரஜா ஆகியோரின் திருமணத்தின் போது இருவீட்டாருக்கும் இடையே திருமணச்சடங்கில் ஏற்பட்ட தகராறு சண்டையில் முடிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த மூவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், நவம்பர் 1-ம் தேதி காவல்நிலையத்துக்கு வந்த இருவீட்டாரும் மணமக்கள் இருவருக்குமிடையே எந்த பிரச்னையும் இல்லையென்று கூறி புகார் அளிக்க முன்வரவில்லை என்று தெரிவித்தார்.

Click for more trending news


More News