தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: முழு விவரம் உள்ளே!

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: முழு விவரம் உள்ளே!

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பஜார், நீலகிரியின் தேவாலா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவானது

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • தற்போது வெப்பச் சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது
  • மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையத்தின் தகவல்படி, ‘தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென் மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பஜார், நீலகிரியின் தேவாலா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவானது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.