This Article is From Nov 18, 2018

அமிர்தசரஸில் குண்டு வெடிப்பு

மூத்த காவல்துறை அதிகாரி சுரேந்தர் பால் சிங்க் பார்மர், 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலை கூறியுள்ளார்

இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்துள்ளனர்

Amritsar:

அமிர்தசரஸில் ராஜசான்சி கிராமத்தில் உள்ள நிரன்கரி பவனில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மூத்த காவல்துறை அதிகாரி சுரேந்தர் பால் சிங்க் பார்மர், 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலை கூறியுள்ளார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், முகத்தை மறைத்தபடி பைக்கில் சென்ற இருவர் குண்டு வீசி சென்றதாக கூறியுள்ளனர். மேலும், குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் வழிபாட்டு தலத்தில் விழாவொன்று நடந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த வழிபாட்டுதலத்தில்  1000க்கும் அதிகமான பக்தர்கள் வழிபட வருவதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக தெரிகிறது. 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சுனில் ஜாஹர், குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு தன்னுடைய இரங்கலைச் தெரிவித்துள்ளார். இது பஞ்சாப்பின் அமைதியை கெடுப்பதற்காகவே இந்த செயலை செய்துள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்து அமைதியை தக்க வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். 

காவல் துறையினர் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி ஃபுட் ஏஜ்களை பெற்று உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

.