This Article is From Dec 30, 2019

மேற்கு வங்கத்தில் தேவாலயத்தில் வெடிகுண்டு வீசியதில் மூவர் கைது

திடீரென தேவாலயத்துக்கு வெளியே இரண்டு குண்டுகள் வெடித்தன. மக்கள் தப்பி ஓடியபோது தேவாலயத்திற்குள் நுழைந்து நாற்காலிகள், மேசைகள், ஜன்னல்கள் மற்றும் ஸ்பீக்கர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தேவாலயத்தில் வெடிகுண்டு வீசியதில் மூவர் கைது

தேவாலயத்தின் ஆயர் அலோக் கோஷ், உள்ளூர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உள்ள எட்டு பேர் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • A group of eight men hurled bombs with shouts of "Jai Shri Ram"
  • The incident occurred at Bhagwanpur in East Midnapore district
  • Three people have been arrested so far, the police said
Kolkata:

மேற்கு வங்காளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலய சொத்துக்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு  தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எட்டு பேர் கொண்ட குழு “ஜெய் ஶ்ரீராம்” என்று கூச்சலுடன் வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். 

கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பகவான்பூரில் மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

தேவாலயத்தின் ஆயர் அலோக் கோஷ், உள்ளூர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உள்ள எட்டு பேர் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

ஒடிசா, மத்திய பிரதேசம், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் முதல் முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சனிக்கிழமை நண்பகலில் வழிபாட்டாளர்கள் தேவாலயத்திற்கு வந்திருந்தபோது திடீரென தேவாலயத்துக்கு வெளியே இரண்டு குண்டுகள் வெடித்தன. மக்கள் தப்பி ஓடியபோது தேவாலயத்திற்குள் நுழைந்து நாற்காலிகள், மேசைகள், ஜன்னல்கள் மற்றும் ஸ்பீக்கர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் 15 நிமிடங்களுக்குப் பின்னரே வெளியேறினர். 

தேவாலய தாக்குதலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட பாஜக தலைமை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

.