This Article is From Nov 17, 2018

கஜா புயலால் 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகள் சேதம்! - தமிழக அரசு தகவல்

கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் 29,500 மின்கம்பங்கள், 205 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.

கஜா புயலால் 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகள் சேதம்! - தமிழக அரசு தகவல்

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கஜா புயலின் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சில மாவட்டங்களில மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இன்று மாலை நிலவரப்படி

உயரழுத்த மின் கம்பங்கள் 10,500, தாழ் அழுத்த மின் கம்பங்கள் 19,000 என மொத்தம் 29,500 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

உயரழுத்த மின் கம்பிகள் 810 கிலோ மீட்டர், தாழ் அழுத்த மின் கம்பிகள் 2435 கிலோ மீட்டர் என மொத்தம் 3245 கி.மீ மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. மின் மாற்றிகள் 205 சேதமடைந்துள்ளன. உயரழுத்த மின் கோபுரங்கள் 3 சேதமடைந்துள்ளன.

ஒரு சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மின் சேதங்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள், மின் கோபுரங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.