ரூ. 68.99 கோடி மதிப்பில் புதிதாக 275 பேருந்துகள் சேவை தமிழகத்தில் தொடக்கம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரூ. 68.99 கோடி மதிப்பில் புதிதாக 275 பேருந்துகள் சேவை தமிழகத்தில் தொடக்கம்

தமிழகத்தில் மொத்தம் 21,678 பேருந்துகள் இயங்கி வருகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 68.99 கோடி மதிப்பில் புதிதாக 275 பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் வாயிலாக மொத்தம் 21 ஆயிரத்து 678 பேருந்துகள் இயங்கி வருகிறது. இங்கிருந்தும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதன் மூலம் சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள் பலன் பெறுகின்றனர். இதேபோன்று புதிய பேருந்துகள் இயக்கம், வழித்தடம் தொடக்கம், அலுவலக கட்டடங்கள், கோட்டங்கள் கூடுதல், இணையதள முன்பதிவு வசதி, பஸ்பாஸ் சேவை, சீனியர் சிட்டிசன் பயண அட்டை உள்ளிட்ட சேவைகளையும் தமிழக போக்குவரத்து துறை செய்து வருகிறது.

அந்த வகையில் இன்று புதிதாக 275 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி சென்னை எம்.டி.சி.க்கு 17, விழுப்புரம் 72, சேலம் 43, கோவை 75, கும்பகோணம் 68 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 68 கோடியே 99 லட்சம் ரூபாய்.

 

மேலும் படிக்க : ஜெயலலிதாவுக்கு பேனர்கள் வைக்க தடை! - உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன
  • தினமும் சுமார் 1.75 கோடி பேர் போக்குவரத்து சேவையை பயன்படுத்துகின்றனர்
  • கேரளா, புதுவை, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது
More News