கோவிலில் திருட வந்ததாக நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவரின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது, திங்களன்று இரவு நேரத்தில் தனது கைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவர்கள் அவரது கணவர் திருட முயற்சித்ததாகவும், எனினும் திருடவதற்கு முன்பே பிடிப்பட்டதால் அவரை அடித்து மருத்துவமைனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோவிலில் திருட வந்ததாக நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!

க்கப்பட்டவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (Representational photo)

Hyderabad: 

தெலுங்கானா மாநிலம், நிஜாம்பாத் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் ஒருவரை கோவிலில் திருட வந்தவர் என நினைத்து கிராம மக்கள் கும்பலாக அடித்து கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கொத்தனாராக பணிபுரியும் இளைஞர் ஒருவர் கோவிலில் திருட முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். 

இதன் பின்னரே கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவரின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது, திங்களன்று இரவு நேரத்தில் தனது கைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவர்கள் அவரது கணவர் திருட முயற்சித்ததாகவும், எனினும் திருடவதற்கு முன்பே பிடிப்பட்டதால் அவரை அடித்து மருத்துவமைனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் வந்து கணவரை சந்திக்கும் படியும் போனில் பேசிய அந்த நபர் தெரிவித்துள்ளார். 

அப்போது, போனில் பேசிய அந்த நபரிடம், அவர்களே அடிப்பதை தவிர்த்து போலீசாருக்கு அல்லவா தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்றேன். தொடர்ந்து, நான் மருத்துவமனை சென்று பார்த்தபோது, எனது கணவரை சடலமாக தான் பார்த்தேன் என்று அந்த பெண் கூறியுள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு 2 மாத கைக் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................