டெல்லியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை சரியாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

கொரோனா பாதிப்பு டெல்லியில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது
  • ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • ஊரடங்கை சரிவர நிறைவேற்றாத 2 மூத்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
New Delhi:

டெல்லியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்ந்த, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 97-ஆக உயர்ந்துள்ளது. 

2 பேரை கொரோனா தலைநகரில் பலி கொண்டுள்ளது. 89 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை டெல்லி அரசு இன்று தெரிவித்துள்ளது. 

டெல்லியைப் பொறுத்தளவில் வீடு வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். 

டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 2,09,567 பேர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19,989 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

கடந்த வாரம் டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊரான அண்டை மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். டெல்லி பேருந்து நிலையத்தில் அவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் எழுந்தது. 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

டெல்லி மசூதியில் வெளிநாடுகளை சேர்ந்த பலரும் வந்து சென்றுள்ளனர். இதன் அடிப்படையில் சுமார் 300 பேரிடம் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையே டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை சரியாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் 2 மூத்த அதிகாரிகள் கடமை தவறியதாக கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

Listen to the latest songs, only on JioSaavn.com