அத்துமீறி நுழைய முயன்ற 24 பாகிஸ்தான் விமானங்கள்! தடுத்து நிறுத்திய 8 இந்திய விமானங்கள்!

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 24 பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படையை சேர்ந்த 8 விமானங்கள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராணுவ தளபதி பாகிஸ்தான் f-16 விமானத்தை மிக்-21 ரக விமானத்தால் துரத்தினார்.

New Delhi:

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து இந்திய ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் காலையில் வந்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் முப்படை கூட்டு மாநாட்டில் பாகிஸ்தானின் எந்தவொரு நடவடிக்கைக்கும், இந்தியா உடனடி பதிலளி கொடுக்க முப்படைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைக்கு வந்துள்ளது. மொத்தம் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 24 விமானங்கள் இந்திய வான் எல்லைப்பகுதிக்கு வந்துள்ளது. தாக்குதல் நடத்த எப் 17 போர் விமானங்கள் இந்திய நிலைகளை குறிவைத்து உள்ளே வந்துள்ளது. அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 விமானங்கள் வானில் மொத்தமாக பதிலடி நடத்தியது.

இதனையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கி திரும்ப தொடங்கியது. இதனால் இந்திய ராணுவப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் விமானங்களின் ரேடார் தவறியது. இந்திய விமானப்படையும் பதிலடிக்கு தயாராகி அதிரடியை காட்டியது. அப்போது பாகிஸ்தான் ஜெட்கள் வேகமாக அந்நாட்டு எல்லைக்குள் சென்றது.