This Article is From Apr 11, 2020

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 40 பேர் பலி; பாதிப்பு எண்ணிக்கை 7,447ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 239ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 40 பேர் பலி; பாதிப்பு எண்ணிக்கை 7,447ஆக உயர்வு!

Coronavirus: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிகை 7,447ஆக உயர்வு

ஹைலைட்ஸ்

  • Highest cases reported from Maharashtra, with 1,574 people affected
  • Prime Minister Narendra Modi likely to address the nation again
  • Before the decision, PM will meet Chief Ministers via video conference
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 239ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வரும் ஏப்.14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து, ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். 

இந்த முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அதில் பல மாற்றங்கள் இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளுக்குத் தடை நீடிக்கும். அதேபோல் பள்ளி, கல்லூரி மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மூடப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என தெரிகிறது. 

உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக 25 இடங்கள் இருந்த நிலையில், தற்போது 30ஆக உயர்ந்துள்ளது. அந்த இடங்களில், எதற்காகவும் மக்கள் வீடுகளை வீட்டே வெளியே வரக்கூடாது என்பது போன்ற, கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்வதே சிறந்த வழிமுறை என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை போன்ற நகரங்களில் அதிகளவு சோதனைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு அதிகளவில் சோதனை கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் ஆய்வு மையங்களும் இந்த சோதனையை மேற்கொள்கின்றன.

கடுமையான சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்  பயண பின்னணி இல்லாத, அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பு பின்னணியும் இல்லாதவர்களுக்கு அதிகமான பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த தகவலில், இதுபோன்ற நோயாளிகளில் 38 சதவீதம் பேருக்கு எந்த பயண பன்னணியும் இல்லாமல் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால், பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளனர். எனினும், பெருளாதார அழுத்தம் மற்றும் அறுவடை காலம் உள்ளிட்ட காரணங்களால், ஊரடங்கை ஒட்டுமொத்தமாக அமல்படுத்தாமல், ஒரு பகுதியாக அமல்படுத்தும் வகையிலும் பரிந்துரைகள் வந்துள்ளன. 

.