‘முகநூல் நண்பராலும் அவரது சகோதரர்களாலும் பலாத்காரம் செய்யப்பட்டேன்!’- உ.பி பெண் குமுறல்

சோனு என்கிற நபரால்தான் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

4 Shares
EMAIL
PRINT
COMMENTS
‘முகநூல் நண்பராலும் அவரது சகோதரர்களாலும் பலாத்காரம் செய்யப்பட்டேன்!’- உ.பி பெண் குமுறல்
Muzaffarnagar: 

உத்தர பிரதேச முசாஃபர் நகரைச் சேர்ந்த 23 வயதுப் பெண், ‘முகநூல் மூலம் நண்பரான ஒருவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது சகோதரர்களும் என்னை பலாத்காரம் செய்துள்ளனர்' என்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். 

சோனு என்கிற நபரால்தான் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், ‘என்னை ஒரு ஓட்டலில் அடைத்து வைத்து சோனு என்னை பலாத்காரம் செய்தார். அவரது சகோதரர்களும் என்னை பலாத்காரம் செய்தனர். அப்படிச் செய்யும் போது வீடியோ எடுத்தனர். இப்போதோ, சோனு தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்டி வருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, சோனு மற்றும் அவரது உறவினர்கள் 10 பேர் மீது ஐபிசி-யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................