தெலுங்கானா பாஜக தலைவரின் மகன் லண்டனில் மாயம்!

உஜ்வால் ஸ்ரீஹர்ஷா கடைசியாக ஆக.21-ம் தேதி தனது தாயாருடன் பேசியுள்ளார். அவரது தந்தை உதய் பிரதாப், தெலுங்கானாவின் கம்மம் மாவட்ட பாஜக தலைவர் ஆவார் என பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா பாஜக தலைவரின் மகன் லண்டனில் மாயம்!

செய்றகை நுண்ணறிவு குறித்த மேற்படிப்பிற்காக உஜ்வால் ஸ்ரீஹர்ஷா கடந்த வருடம் லண்டனம் சென்றுள்ளார்.

Hyderabad:

தெலுங்கானாவை சேர்ந்த பாஜக தலைவர் உதய் பிரதாப்பின் மகன் லண்டனில் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட பாஜக தலைவர் உதய் பிரதாப், இவரது மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா (23). இவர், இயந்திர கற்றல் மற்றும் செய்றகை நுண்ணறிவு குறித்த மேற்படிப்பை மேற்கொள்ள கடந்த வருடம் லண்டனம் சென்றுள்ளார். 

உஜ்வால் தினமும் தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசுவது வழக்கம், அந்த வகையில் கடந்த கடைசியாக ஆக.21-ம் தேதி தனது தாயாருடன் பேசியுள்ளார். இதற்கு மறுநாள் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை, குடும்பத்தினர் அவரது எண்ணிற்கு அழைத்தபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. 

இதனையடுத்து மகன் மாயமானது தொடர்பாக உதய் பிரதாப், லண்டன் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே மத்திய உள்துறை இணை அமைச்சரான கிஷான் ரெட்டி இவ்விவகாரத்தில் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

உஜ்வால் ஸ்ரீஹர்ஷா ஒரு விஞ்ஞானி ஆக விரும்யுள்ளார், சமீபத்தில் இது தொடர்பான ஒரு திட்டப்பணிக்காக ஜப்பான் சென்று வந்துள்ளார் என அவரது தந்தை பிரதாப் தெரிவித்துள்ளார். 


 

More News