என்னதான் நடக்கிறது சிதம்பரத்தில்..? - இழுபறிக்குப் பின்னர் திருமா முன்னிலை

இந்திய தேர்தல் ஆணைய தளத்தில் கடைசியாக இரவு 10:50 மணிக்கு கொடுத்த தகவலின்படி திருமாவளவன், 4,95,850 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
என்னதான் நடக்கிறது சிதம்பரத்தில்..? - இழுபறிக்குப் பின்னர் திருமா முன்னிலை

அடுத்தபடியாக அதிமுக-வின் சந்திரசேகர், 4,92,952 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 


2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறை ஆட்சியமைக்கப் போகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 35 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் எனத் தெரிகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தளத்திலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் தளத்திலும் சிதம்பரம் தொகுதி குறித்து மாறுபட்ட தகவலை கூறி வருவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. இன்னும் ஒரு சில சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், ஏன் இந்த இழுபறி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் எந்த வித விளக்கும் தரப்படவில்லை. 

இந்திய தேர்தல் ஆணைய தளத்தில் கடைசியாக இரவு 10:50 மணிக்கு கொடுத்த தகவலின்படி திருமாவளவன், 4,95,850 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அடுத்தபடியாக அதிமுக-வின் சந்திரசேகர், 4,92,952 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................