This Article is From Jan 02, 2020

2010-2019: உலகளவில் நடந்த தசாப்தத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகள்!

2010-2019: தசாப்தத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் விரிவான மற்றும் நுண்ணறிவான பட்டியல் ... முன்னேற்றங்கள், இதயத் துடிப்புகள், மோசமான உயர்வுகள், சோகமான தாழ்வுகள், சாதனைகள் மற்றும் மைல்கற்கள்.

2010-2019: உலகளவில் நடந்த தசாப்தத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகள்!

2010s: 2010-2019க்கு இடையில் உலகெங்கிலும் உள்ள நிகழ்வுகளின் சிறப்பம்சங்கள்.

New Delhi:

டிசம்பர் 31ம் தேதியுடன் டிகேட் என்று சொல்லக்கூடிய 10 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இந்த பத்தாண்டுகளில் நமது வாழ்க்கை, வேலை, உணவு, பயணம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை முழுமையாக மாறியுள்ளன. ஸ்மார்ட்போன்கள் நம்மை முன்னேற்றுகின்றன. உணவுப்பொருட்கள் வீடு தேடி வருகின்றன. பணப்பரிவர்த்தனை முதல் முன்பதிவு வரை அனைத்துமே விரல்நுனிக்கு வந்துவிட்டன. இந்த கட்டுரையில் 10 நிமிடத்தில் இந்த வருடம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை தொகுப்பாக பார்க்கலாம்.

2010 கடந்து வந்த பாதை:

ஆப்பிள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் முதல் ஐபாட்டை அறிமுகம் செய்தார். இன்ஸ்டாகிராம், ஓலா, உபர் துவங்கப்பட்டது, வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ச்டர்வதேச சந்தைக்கு அறிமுகமானது நெட் ஃபிளிக்ஸ். விக்கி லீக்ஸை துவங்கினார் அசாஞ்சே, உலகைன் மிகப்பஎரிய கட்டமாக அறிவிக்கப்பட்டது புர்ஜ் கலிபா. உலகின் ஹிட் ஆல்பத்தை தந்தார் 16 வயது ஜஸ்டின் பைபர், ஆக்டோபஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகளை கணித்தது.

2010ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: ஜோதிபாசு, முன்னாள் பெங்கால் முதல்வர்

6n39t8i4

2011 கடந்து வந்த பாதை:

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இந்தியா வந்தது ஃபார்முலா ஒன் பந்தயம், ஜப்பானில் சுனாமி, புகுஷிமா அணூலை வெடித்தது. பூமிக்கு மீண்டும் திரும்பும் ராக்கெட்டை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ், நெல்சன் மண்டேலாவுக்கு பிறகு உலகின் மதிப்புமிக்க நபர் என்ற பெயரை பெற்ரார் ரோஜர் ஃபெடரர்.

2011ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பட்டோடி

2vkl86ak

2012 கடந்து வந்த பாதை:

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபரானார். புதின் மீண்டும் ரஷ்ய அதிபரானார். கங்ணம் ஸ்டைல் பிரபலமானது.

2012ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: நிர்பயா,  பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணா, நிலவில் முதலில் கால் வைத்த  நீல் ஆம்ஸ்ட்ராங்

s61kgi1k

2013 கடந்து வந்த பாதை: 
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியா தனது கடைசி தந்தியை அனுப்பி தந்தி சேவையை நிறுத்திக் கொண்டது. கேதர்நாத் வெள்ளம், போஸ்டான் மாரத்தானில் குண்டுவெடிப்பு, ட்விட்டர் அறிமுகமானது.

2013ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலே, ஹாலிவுட் நடிகர்  பால் வாக்கர்

qm1vba1c

2014 கடந்து வந்த பாதை:

மோடி அலை நாடு முழுவதும் வீசியது பாஜக ஆட்சியை பிடித்தது. தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கோலி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மலேசிய விமானம் எம்.ஹச் 370 மாயம். வட கொரியா சோனி பிக்சர்ஸை ஹேக் செய்தது.

2014ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: நடிகர் ராபின் வில்லியம்ஸ், லாரன் பகால்

rqovplbk

2015 கடந்து வந்த பாதை: 

நேபாளில் நிலநடுக்கம் 9000 பேர் உயிரிழப்பு. சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனார், சாய்னா நெவால் பேட்மின்டன் தரவரிசையில் முதலிடம். சிரியாவுடனான அகதிகள் கொள்கையை மாற்றிக் கொண்டது துருக்கி

2015ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம்

5l5gk1qg

2016 கடந்து வந்த பாதை:

இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு, ஜம்மு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தது இந்திய ராணுவம், ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்து ட்ரம்ப் அமெரிக்க அதிபரானார். அமேசான் ப்ரைம் அறிமுகம் செய்யப்பட்டது. டிகாப்ரியோ ஆஸ்கர் வென்றார்.

2016ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிடல் காஸ்ட்ரோ.

6bd4rplk

2017 கடந்து வந்த பாதை: 

ஒரே நாடு.. ஒரே வரி என்ற ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு திருமணம் நடந்தது. இந்தியா நூயி பெப்ஸி சிஇஓ பதவியிலிருந்து விலகினார். உசேன் போல்ட் ஓய்வு பெற்றார்.

2017ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா.

sh4peu8c

2018 கடந்து வந்த பாதை: 

துருக்கியில் பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார், அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட அனுமதி வழங்கியது. பெண்கள் சபரிமலக்குள் நுழைய அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம், 20 க்ராண்ட்ஸ்லாம் வென்று ஃபெடரர் சாதனை. உலகின் மிகப்பெரிய சிலையான வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் நிறுவப்பட்டது.

2018ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: முன்னாள் பிரதமர் வாய்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, பாலிவுட் நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் காலமானார்கள்.

5fiihhoc

2019 கடந்து வந்த பாதை:

காந்தியின் 150வது நாடுமுழுவதும் கொண்டாட்டம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டதிருத்தம் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு , சுந்தர் பிச்சை ஆல்பபெட்டின் சிஇஓ ஆனார்.

2019ல் நம்மை விட்டு பிரிந்தவர்கள்: ஷீலா தீட்ஷித், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ்.

4qm48q7g

இந்தியா தனது இரண்டாவது சந்திர ஆய்வு பணியான சந்திரயான் -2 ஐ விஞ்ஞான ஆய்வுக்காக விரிவான படங்களை தவறாமல் அனுப்புகிறது.

.