மன அழுத்தத்திற்கு இயற்கையே மருந்து - ஆய்வு பதில் இதுதான்

தினமும் 20 முதல் 30 நிமிடம் வரை உட்கார்ந்தோ அல்லது நடந்தோ இயற்கையை ரசிக்கும் போது மன அழுத்தம் வெகுவாக குறைகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
மன அழுத்தத்திற்கு இயற்கையே மருந்து - ஆய்வு பதில் இதுதான்

இயற்கையை பார்த்து ரசிக்கும் அனுபவம் மன அழுத்தம் கொடுக்கும் கார்டிசோல் அளவு பெருமளவு குறைந்துள்ளதை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இயற்கை அழகை ரசித்த்தால் மன அழுத்தம் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மிக்சிகன் பல்கலைக்கழக உடல் நல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ‘இயற்கையே மருந்து' என்கிற அடிப்படையில் இந்த உடல் நலத்தை அளவிடும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த  ஆய்வின் படி “இயற்கையோடு செலவிடும் நேரம் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை அறிவோம். ஆனால் எவ்வளவு நேரம் இருந்தால் இயற்கையை ரசித்தால் மன நலனுக்கு ஏற்றது என்பதையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் ஆய்வு எடுத்துக் கூறுவதாக ஆய்வாளர் மேரிரோல் ஹண்டர் கூறினார்.

இந்த ஆய்வு உளவியல் பத்திரிகையில் வெளியானது. 36 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.  எட்டு வாரம் தொடர்ந்து தினமும் 10 நிமிடம் இயற்கையை ரசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். மன அழுத்தத்தைக் கொடுக்கும் ஹார்மோனை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உமிழ்நீர் மாதிரிகள் மூலமாக அளவிட்டனர்.

இயற்கையை பார்த்து ரசிக்கும் அனுபவம் மன அழுத்தம் கொடுக்கும் கார்டிசோல் அளவு பெருமளவு குறைந்துள்ளதை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தினமும் 20 முதல் 30 நிமிடம் வரை உட்கார்ந்தோ அல்லது நடந்தோ இயற்கையை ரசிக்கும் போது மன அழுத்தம் வெகுவாக குறைகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................