This Article is From Dec 04, 2018

தெலங்கானா தேர்தல் : 2 சதவீத வாக்குகள் திருப்பத்தை ஏற்படுத்தும் – பிரணாய் ராய் கணிப்பு

தெலங்கானாவில் முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து சவாலை எதிர்கொள்கிறது.

தெலங்கானா தேர்தல் முடிவுகள் அடுத்த மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்க கூடும்

Hyderabad:

நாட்டின் மிகவும் இளமையான மாநிலமான தெலங்கானாவில் டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2 சதவீத வாக்குகள் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பிரணாய் ராய் கணித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இவ்வாறான கூட்டணி அமைவது இதுவே முதல்முறை. இந்த மிகப்பெரும் சவாலை தற்போது ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர் கொள்ளவுள்ளது.

முறையான தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், முன் கூட்டியே தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் சட்டசபையை கலைத்தார். இந்த மாநிலத்தில் காலூன்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இந்த தேர்தலின் முடிவுகள் எதிர்வரும் மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் தெலங்கானாவில் அவர் அதிக இடங்களை காங்கிரசிடம் இருந்து பெறவில்லை.

அதேநேரத்தில் சந்திர சேகர ராவ் காங்கிரஸ் மற்றும் பாஜ அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களை பார்க்கும்போது சிறிய கட்சிகள் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தெரிய வருகிறது.

0oe7apak

கடந்த 2014 சட்டசபை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) மிக எளிதாக பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்தது. 2014-ல் எடுத்த அதே முடிவை தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் எடுத்தார்கள் என்றால், 2 சதவீத வாக்குகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

9n2t08n8

தெலங்கானாவின் வடக்கு மாவட்டங்களில் டி.ஆர்.எஸ். கட்சி வலிமையாக உள்ளது. இங்கு கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சியின் வாக்கு வித்தியாசம் 20 சதவீதத்தை தாண்டியுள்ளது.

fvikl8ts

இலவச அறிவிப்புகள், நலத்திட்டங்கள் ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஓய்வூதியம், இலவச மின்சாரம், வாட்டர் கனெக்ஷன்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

erepaiso15n0dei8
2rt2paqcm3n9iupsv1o61ebglffve88sjccc5774be58009c

தெலங்கானாவை பொருத்தளவில் கிராமப்புற வாக்காளர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. நாட்டில் நகரங்களில் வசிப்போரின் சராசரி 30 சதவீதம் என்றால் அந்த எண்ணிக்கை தெலங்கானாவில் 39 சதவீதமாக உள்ளது.

.