ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டன.

Srinagar:

ஜம்மு & காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தின் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடத்தில் ஆயுதங்கள் மற்றூம் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குல்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நடந்தது என்று காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தேடுதல் வேட்டையின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. 

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குல்கம் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டன.

More News