ரூ. 7.50 லட்சம் மதிப்பிலான நகைகளை பயணியிடம் திருப்பி ஒப்படைத்த ஓட்டுனர்கள்!!

தங்க நகைகள் திரும்ப கிடைத்ததும் அதன் உரிமையாளர், ஓட்டுனர்களுக்கு உதவித் தொகை அளித்துள்ளார். இதனை வாங்க ஓட்டுனர்கள் மறுத்து விட்டனர்.

ரூ. 7.50 லட்சம் மதிப்பிலான நகைகளை பயணியிடம் திருப்பி ஒப்படைத்த ஓட்டுனர்கள்!!

நகைகளை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுனர்களை மக்கள் பாராட்டினர்.

ஹைலைட்ஸ்

  • பூனே ரயில் நிலையத்தில் நகைகள் அடங்கிய பையை பயணி ஒருவர் தொலைத்தார்
  • கேட்பாரற்று கிடந்த பையை ஓட்டுனர்கள் 2 பேர் போலீசில் ஒப்படைத்தனர்
  • நகை உரிமையாளர் பணம் கொடுக்க அதை ஒட்டுனர்கள் வாங்க மறுத்து விட்டனர்
Pune:

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் ரூ. 7.57 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் அடங்கிய பையை, பயணி ஒருவர் தவற விட்டார். இதனை அவரிடம் ஓட்டுனர்கள் 2 பேர் மீட்டுக் கொடுத்தனர். நேர்மையாக நடந்துகொண்ட ஓட்டுனர்களை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.

பூனே ரயில் நிலையம் அருகே அதுல் திலகர் மற்றும் பாரத் போசாலே ஆகிய 2 ஓட்டுனர்கள் பயணிகளுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது கார் பார்க்கிங் அருகே பை ஒன்று கிடந்துள்ளது.

அதனை திறந்து பார்த்ததில் அதில் தங்க நகைகள் இருந்துள்ளன. இதையடுத்து இருவரும் அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக தீபக் சித்ராளா என்பவர், தனது நகைப் பையை காணவில்லை என்று போலீசிடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தங்க நகைகள் அடங்கிய பை, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அவரிடம் பை எப்படி கிடைத்தது என்ற விவரத்தை போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுனர்களுக்கு பணத்தொகையை சித்ராளா பரிசாக அளித்துள்ளார். இதனை இருவரும் ஏற்கவில்லை. நேர்மையாக நடந்து நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். 

Listen to the latest songs, only on JioSaavn.com