This Article is From Dec 12, 2019

Nithyananda ஆசிரமத்தில் மாயமான 2 பெண்கள் வாக்குமூலம் கொடுக்க ரெடி- ‘கைலாசா’ உண்மைகள் வெளிவருமா?

Nithyananda News - முன்னதாக இந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் போலீஸ் தரப்பு, ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் இந்தியாவிலிருந்து தப்பித்து வேறு நாட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

Nithyananda ஆசிரமத்தில் மாயமான 2 பெண்கள் வாக்குமூலம் கொடுக்க ரெடி- ‘கைலாசா’ உண்மைகள் வெளிவருமா?

Nithyananda News - அவர்களின் கோரிக்கையை மறுத்துள்ள நீதிமன்றம், நேரில் வந்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

New Delhi:

Nithyananda News - குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்கும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மாயமான இரண்டு சகோதரிகள், குஜராத் நீதிமன்றத்தின் முன்னிலையில் வாக்குமூலம் கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் இருக்கும் அல்லது அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திலிருந்து வாக்குமூலம் கொடுத்த தயார் என்று கூறியுள்ளனர். 

அதே நேரத்தில் அவர்களின் கோரிக்கையை மறுத்துள்ள நீதிமன்றம், நேரில் வந்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

அகமதாபாத்தில் இருந்த நித்தியானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமத்திலிருந்து தனது இரண்டு மகள்களும் காணாமல் போய்விட்டனர் என்பதை உணர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், தங்களின் வழக்கறிஞர்கள் மூலம் இரண்டு பெண்களும், நாங்கள் நேரடியாக வந்து நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றும் தங்களின் தந்தையினால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். 

நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுக்கு, “நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம். நேரில் வந்து ஆஜராக வேண்டும்,” என்று சகோதரிகளின் வழக்கறிஞர்கள் மூலம் கூறியுள்ளார்கள். டிசம்பர் 19 ஆம் தேதிக்கு முன்னர் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் போலீஸ் தரப்பு, ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் இந்தியாவிலிருந்து தப்பித்து வேறு நாட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

சர்மா தனது மனுவில், “எனது இரண்டு மகள்களும் நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டத்துக்கு விரோதமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்,” எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா தரப்பினர், கைலாசா (Kailasa) என்னும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டனர். தொடர்ந்து இது குறித்து வீடியோ மூலம் நித்தியானந்தாவும் பேசி வருகிறார். பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வரும் நபராக இருக்கும் நித்தியானந்தா, தற்போது எங்கு இருக்கிறார் என்பது இந்திய அரசு தரப்புக்குத் தெரியவில்லை.


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.