பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த இரண்டு நபர்கள் பரிதாபமாக பலி!

பிளேயர்ஸ் அன்னோன் பேட்டில் கிரவுண்ட் என்னும் பப்ஜி வீடியோ விளையாட்டு தென் கொரியாவை சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த இரண்டு நபர்கள் பரிதாபமாக பலி!
Mumbai: 

கடந்த சனிக்கிழமையன்று, மகராஷ்டிராவில் உள்ள ஹிங்கோலி என்னும் இடத்தில் இருந்த ரயில் பாதையின் அருகில் நின்றுகொண்டு பப்ஜி என்னும் வீடியோகேம்மை விளையாடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர்கள் நாகேஷ் கோரே (24) மற்றும் ஸ்வாப்னில் அன்னாபூர்னே (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிளேயர்ஸ் அன்னோன் பேட்டில் கிரவுண்ட் என்னும் பப்ஜி வீடியோ விளையாட்டு தென் கொரியாவை சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டிற்கு பலரும் அடிமையாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து அடுத்த கட்ட விசாணையை மேற்கொண்டு வருகின்றனர்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................