This Article is From Jul 20, 2019

ஆப்கனிலிருந்து சணல் மூட்டையில் கடத்தி இந்தியா முழுக்க சப்ளை! ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்

கைது செய்யப்பட்ட 5 பேரில் இருவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள். கெமிக்கல் துறையில் வல்லுனர்களரக உள்ள அவர்கள், சாமர்த்தியமாக போதைப்பொருளை ஆப்கனில் இருந்து கடத்தியுள்ளனர்.

ஆப்கனிலிருந்து சணல் மூட்டையில் கடத்தி இந்தியா முழுக்க சப்ளை! ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

New Delhi:

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இந்தியா முழுக்க சப்ளை செய்யப்படவிருந்த ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 600 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஷின்வாரி குல், அக்தர் முகமது, வகீல் அகமது, ராயிஸ் கான், தீரஜ் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குல் மற்றும் அக்தர் முகமது ஆகியோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்.

ஷின்வாரி குல் ஒரு கெமிக்கல் வல்லுனர் ஆவார். அவர்தான் ஆப்கனிஸ்தானில் இருந்து போதைப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு அக்தர் முகமது உதவிளராகாக செயல்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சீரகம் போன்ற மளிகைப் பொருட்கள் சணல் மூட்டையில் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் ஹெராயினை திரவ நிலைக்கு மாற்றி அதனை சணல் மூட்டையில் அடைக்கப்படுகின்றன.

மூட்டைகள் இந்தியா வந்த பின்னர் அவை தனியாக கொண்டு செல்லப்பட்டு கெமிக்கல்களை பயன்படுத்தி மீண்டும் ஹெராயின் பிரித்து எடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு சாக்கு மூட்டையிலும் ஒரு கிலோ எடைகொண்ட ஹெராயின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்படுகிறது.

கைதானவர்களில் வகீல் அகமத மற்றும் ராயிஸ் கான் ஆகியோர் பாஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்துள்ளனர்.

கைதானவர்களிடம் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கும்பல் வேறு எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.