This Article is From Nov 30, 2018

இந்தியில் ரிக்கார்டு வைத்த ரஜினியின் 2.0

3D மற்றும் 2D தொழில் நுட்பத்தில் வெளியாகியிருக்கும் ரஜினியின் 2.0 திரைப்படம் முந்தைய ரிக்கார்டுகள் பலவற்றை முறியடித்து வருகிறது.

இந்தியில் ரிக்கார்டு வைத்த ரஜினியின் 2.0

அக்ஷய் குமார் நடிப்புக்கு இந்தியில் நல்ல வரவற்பு கிடைத்திருக்கிறது.

New Delhi:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஹாலிவுட்டுக்கு இணையாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

திரையரங்குகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டத்தையும் பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்தத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் 2.0 திரைப்படம் ட்ரீட் வைத்திருக்கிறது. அதே நேரத்தில் முந்தைய ரிக்கார்டுகளையும் படம் முறியடித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.

இந்த நிலையில் இந்தி வெளியீட்டில் 2.0 புதிய ரிக்கார்டை வைத்திருக்கிறது. 2.0-ன் பூர்வீகம் என்பது தமிழை மையமாக கொண்டது. இந்த திரைப்படம் இந்தியில் வெளியானபோதும் அங்கு 4 ஆயிரம் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. மொத்தத்தில் 40 சதவீத இந்தி திரையங்குகளில் 2.0 படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது 8-வது மிகப்பெரும் ஓப்பனிங் என்றும், இது ஒரு சாதனை எனவும் சினிமா வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பு பாகுபலி 2, சஞ்சு, கோல்டு, ரேஸ் 3 ஆகியவை மொத்தம் 65 சதவீத திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தன. அந்த வரிசையில் 2.0 திரைப்படம் தற்போது இணைந்திருக்கிறது.

2.0 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 500 கோடிக்கும் அதிகம் என்று தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்டவையால் சுமார் ரூ.370 கோடியை 2.0 வசூலித்து விட்டது.

.