தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 2.0

ரூ. 500 கோடிக்கும் அதிகமான பொருட் செலவில் 2.0 திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 2.0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 2010ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது.

படத்தில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் costliest மூவி என விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 500 கோடி பொருட்செலவில் 3Dதொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 2.0 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே 2.0 படத்தை இணைய தளங்களில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும், தமிழ் ராக்கர்ஸ் இணைய தள அட்மின்கள் 2.0-வை வெளியிட்டு அட்டகாசம் செய்திருக்கின்றனர்.

ஒவ்வொரு புதிய படம் திரைக்கு வரும்போதும் அதே நாளில் அந்த படத்தை, தங்களது இணைய தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் வெளியிடுகின்றனர். இவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் படிக்க : மெகா பட்ஜெட் படமான ‘2.0'வை வெளியிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்' – ஷாக் மோடில் படக்குழுவினர்

More News