This Article is From May 11, 2019

1984-ம் ஆண்டு சீக்கிய கலவரம்: காங். நிர்வாகியின் சர்ச்சை கருத்து; கொதித்தெழுந்த ராகுல்!

'அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்'

1984-ம் ஆண்டு சீக்கிய கலவரம்: காங். நிர்வாகியின் சர்ச்சை கருத்து; கொதித்தெழுந்த ராகுல்!

1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்

ஹைலைட்ஸ்

  • காங்ரஸின் சாம் பிட்ரோடாதான் சர்ச்சை கருத்து கூறியிருந்தார்
  • பிட்ரோடாவிடம் இது குறித்து பேச இருப்பதாக ராகுல் கூறியுள்ளார்.
  • இந்த விவகாரத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி
New Delhi:

1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிட்ரோடா மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சாம் பிட்ரோடாவிடம் ஓர் செய்தியாளர் சந்திப்பின் போது, சீக்கிய கலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அது நடந்துவிட்டது என்ன செய்யலாம் என்பது போல கருத்து தெரிவித்துவிட்டார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ்தான் இந்த நாட்டை வெகு காலம் ஆட்சி செய்தது. ஆனால், அந்த கட்சி எப்படி உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தலைமை பொறுப்பில் இருக்கிறது என்பது இப்போது தெரிகிறது. இது தற்செயலாக காங்கிரஸ் பேசிய கருத்தாக பார்க்க முடியாது. அவர்களின் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க முடியும்” என்று கறாராக விமர்சித்தார். 

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ, சாம் பிட்ரோடா, காங்கிரஸிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தயுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ள ராகுல் காந்தி, “சாம் பிட்ரோடா சொன்ன கருத்து என்பதை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்.

அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என் தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம். 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது' என்று கூறியுள்ளார். 

மத்திய அரசு தரப்பில் உருவாக்கப்பட்ட நானாவதி கமிஷன், 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டி பாஜக, காங்கிரஸை விமர்சித்து வருகிறது. இதைத் தொடர்புபடுத்திதான் சாம் பிட்ரோடா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். 

(ஏஜென்சி தகவல்களுடன் எழுதப்பட்டது)

.