16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை!

வெவ்வேறு பகுதிகளை சார்ந்த குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை!

ஆந்திராவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு போலீசார் குற்றவாளாகளை கைது செய்தனர்.

Amaravati, Andhra Pradesh:

ஆந்திராவில் 16 வயது சிறுமியை 5 நாட்களாக அடைத்து வைத்து 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் எம்.சுச்சரிதா கூறும்போது, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமிக்கு ஓங்கோலை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டிவிட்டு வெளியேறி ஓங்கோலுக்கு தனியே சென்றுள்ளார்.

Newsbeep

அப்போது, சிறுமியிடம் ஒருவர் பேச்சு கொடுத்த தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 4 நாட்கள் சிறுமியை அடைத்து வைத்து நண்பர்களுடன் இணைந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்கிருந்து தப்பிய சிறுமி போலீசில் நடந்தவற்றை தெரிவிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.