This Article is From Dec 07, 2018

அரச குடும்பங்கள் வளையல்கள் வாங்கும் 150 வருட பழமையான கடை!

ஜோத்பூர் அரசு குடும்பத்தினர், அம்பானி குடும்பம் மற்றும் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா மற்றும் கபீர் பேடி என இந்த கடை வளையல்களை விரும்புவர்கள் அதிகம்.

அரச குடும்பங்கள் வளையல்கள் வாங்கும் 150 வருட பழமையான கடை!

ராஜஸ்தானில் உள்ள 150 வருடம் பழமையான வளையல் கடை

Jodhpur (Rajasthan):

கைவினை பொருட்களின் தலைநகரமான ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் பீபாஜி வளையல்கள், சுமார் 150 வருட பாரம்பரியத்துடன் வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கடை உரிமையாளர்கள் கலைப்பொருட்களை பல தலைமுறையாக வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள மக்களிடையே பிரபலமான இவ்வகை கலைப்பொருட்களை சாதாரண மக்கள் மட்டுமின்று அரசகுடும்பத்தினரையும் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

ஜோத்பூர் அரசு குடும்பத்தினர், அம்பானி குடும்பம் மற்றும் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா மற்றும் கபீர் பேடி என இந்த கடை வளையல்களை விரும்புவர்கள் அதிகம்.

இதன் கடை உரிமையாளரான அப்துல் சாதார் இது கூறித்து பேசியபோது ‘என் கொள்ளு பாட்டி ‘பீபாஜி' தான் இந்த கடையை முதலில் நிறுவியவர், ஆனால் இன்னமும் என்னை அவர் பெயர் வைத்தே அடையாளம் கருதப்படுகிறது. என் பாட்டி அக்காலக்கட்டத்தில் மாளிகைக்கு சென்று வளையல்கள் விற்றதனாலே இந்த வியாபாரத்தை நாங்கள் தொடங்கினேம். பின்னர், பீபாஜிக்கு வயதாகிய பிறகு என் தந்தை சைக்கிளில் வளையல்களை விற்க தொடங்கினார். நானும் சைக்கிள்களில் கொண்டு சென்று வளையல்களை விற்க தொடங்கினேன் இப்பொழுது கடையாக மாற்றியுள்ளோம்.

1970-களில் சாதார் தொடங்கிய இந்த வியாபாரத்தில்  இடம்பெற்றுள்ள வளையல்கள் 20 வருடத்திற்கு முன்னர் என் தந்தை கண்டுபிடித்த கிரூஸ்டல் வளையல்களாகும்

எல்லாவகையான கலரிலும் வெவ்வேறு வகையான மெட்ரீயல் வளையல்களும் இங்கு கிடைக்கும். இந்த வளையல்கள் காலத்தின் கட்டாயத்திற்க்கு இணங்க மாற்றத்தை வைத்து புதிய டிரெண்டுகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

.