This Article is From Jul 16, 2018

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், கூடாரம் சரிந்து விபத்து: 15 பேர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமரின் பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

Midnapore, West Bengal:

மேற்கு வங்காளம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், கூடாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் காயம் அடைந்துள்ளனர்

மேற்கு வங்காளம் மிட்நாபூர் பகுதியில் நடைப்பெற்ற பொது கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். காலை முதல், மிட்நாபூர் பகுதியில் மழை பெய்து வந்தது. கூட்டத்துக்காக போடப்பட்டிருந்த கூடாரத்தின் கம்பங்களில் ஏறிபிரதமரை பார்க்க பலர் முற்பட்டதால் திடீரென்று, கூடாரம் சரிந்து விழுந்ததில், 15 பேர் காயமடைந்துள்ளனர். சிகிச்சைக்காக, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உரை ஆற்றும் போது, கூடாரம் சரிந்து விழுவதை கண்ட பிரதமர், பாதியிலேயே உரையை நிறுதினார். மக்களை, பாதுக்கப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தினார். “கூடாரத்தின் மேல் ஏறியவர்கள், இறங்கிவிடுங்கள்” என்று மைக்கில் அறிவிப்புகள் கொடுத்தார்.

விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமரின் பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரதமரி மருத்துவரும், ஆம்புலன்ஸும் காயமடைந்தவர்களுக்கு உதவ பயன்படுத்தப்பட்டது.

 பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

விபத்தில் காயம் அடைந்தவர்களில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய பொது கூட்டத்தில், 40 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.